- Home
- Cinema
- தேவகியாக நடிக்கும் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியல் நடிகையின் நிஜ அம்மா! வைரலாகும் புகைப்படம்!
தேவகியாக நடிக்கும் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியல் நடிகையின் நிஜ அம்மா! வைரலாகும் புகைப்படம்!
Ethirneechal Thodarkirathu: திருச்செல்வம் இயக்கி வரும், 'எதிர்நீச்சல்' தொடர்கிறது சீரியலில் தேவகி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் முதல் பாகம்:
மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற காலத்தால் மறக்க முடியாத சீரியல்களை இயக்கி சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் திருச்செல்வம். இவர் இயக்கத்தில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே நேரம், மாரி முத்துவின் மரணம் மற்றும் புதிய ஆதி குணசேகரன் எண்ட்ரியால் சீரியல் ரேட்டிங் குறைந்தது. அதை மேனேஜ் செய்ய இயக்குனர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் முடியாமல் போகவே அதிரடியாக எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மர்ம முடிச்சுகள்:
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்கிற பெயரில் இந்த இரண்டாம் பாகம் துவங்கப்பட்டது. இதிலும் பெண்கள், அவர்களின் உரிமைக்காக போராடி வருவதே கதைக்களம். எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் அடுத்தடுத்து பல மர்ம முடிச்சுகள் அவிழ துவங்கி இருக்கிறது.
தேவகியை தேடும் சக்தி:
சக்தி குணசேகரன் பீரோவை தேடிய போது, அவருக்கு கிடைத்த கடிதம்... ஆதி முது குடும்பத்தின் ரகசியத்தை வெளியே கொண்டு வர உள்ளது. இது மிகப்பெரிய விஷயம் என்பதை அறிந்து, சக்தி ராமேஸ்வரம் சென்று தேவகி என்கிற பெண்ணை தேட, ஜனனியும் தன்னிடம் கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரித்து வருகிறார். அதே நேரம் குணசேகரன் தன்னுடைய தம்பி சக்தியை வேவு பார்க்கவும் ஆட்களை ஏவி உள்ளார்.
சக்தி ரகசியத்தை அறிவாரா?
சக்தி தேடி வந்த ரகசியத்தை அவர் கண்டு பிடிப்பாரா? என்ன அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், குணசேகரனுக்கு கடிதம் எழுதிய பெண்ணான தேவகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, இந்த சீரியலில் நடித்து வரும் நடிகையின் அம்மா தானாம்.
மோனிகாவின் நிஜ அம்மா:
அதாவது தர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மோனிகாவின் நிஜ அம்மா தான் தேவகி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.