மஹாலட்சுமிகாக ரவீந்திரன் கட்டிய மஹால்... எத்தனை லட்சத்தில் தெரியுமா?
புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ravindran- mahalakshmi
தற்போதைய சோசியல் ட்ரெண்டிங் விஜே மகாலட்சுமி - ரவீந்திரன் திருமணம் தான். முன்னதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தையே விழுங்கி விட்டது இந்த திருமணம். தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வரும் தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்தேறியது.
ravindran- mahalakshmi
அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட மகாலட்சுமிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மகாலட்சுமி விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் சீரியல்களில் பிஸியாக இருந்தார். இதற்கிடையே பல சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனின் மனம் முடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...மகளை காணாமல் தவிக்கும் பாக்கியா...தந்தையுடன் கூட்டு சேர்ந்த செழியன்...பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.
ravindran- mahalakshmi
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் அதோடு சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் இவர் வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறிய அவரிடம் வசமாக சிக்கி இருந்தார். தற்போது பதிலுக்கு செய்து வருகிறார் வனிதா.
மேலும் செய்திகளுக்கு...ஜெயலலிதா என்னை ரெக்கமண்ட் செய்தார்...ஆனால் மணிரத்னம் மறுத்து விட்டார்..ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்
ravindran- mahalakshmi
திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாக்களில் அதிக பேட்டி கொடுத்து வரும் அந்த ஜோடி குறித்து பலரும் தாறுமாறாக கமெண்ட் செய்து வந்தாலும் அதை எவற்றையும் பொருட்படுத்தாமல் தனது காதலியை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ரவீந்திரன்.
மேலும் செய்திகளுக்கு...எம். ஜி.ஆர் -யிடம் இருந்து நான் தான் உரிமையை வாங்கினேன்...கனவு நிறைவேறாதது குறித்து கமல் உருக்கம்..
ravindran- mahalakshmi
அதோடு திருமணத்திற்கு பிறகு போட்டோ சூட்டிலும் பிசியாக இருக்கும் இந்த ஜோடி குறித்து சமீபத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது. அதாவது மகாலட்சுமிக்கு என 300க்கும் மேற்பட்ட பட்டு புடவைகள் உடன் உடல் முழுவதும் தங்க நகைகளால் மகாலட்சுமியை அலங்கரித்துள்ளார் ரவீந்திரன்.
ravindran- mahalakshmi
மேலும் ரவீந்திரன் புது மனைவிக்காக தனித்துவம் வாய்ந்த வீட்டையு கட்டி உள்ளாராம். வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம் உள்ளிட்ட பிரம்மாண்டங்களை அமைத்து இந்த வீட்டை வடிவமைத்துள்ள தயாரிப்பாளர் இதற்காக 75 லட்சம் வரை செலவிட்டுள்ளாராம். அதோடு புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.