மகாலட்சுமியுடனான திருமணத்தை விமர்சித்த வனிதா! இப்படி என் வாழ்க்கை துவங்கவில்லை? நச் பதிலடி கொடுத்த ரவீந்தர்!
பிரபல சீரியல் நடிகையை தயாரிப்பாளர் திருமணம் செய்து கொண்டதை விமர்சித்த வனிதாவுக்கு, தற்போது நச் பதிலடி கொடுத்துள்ளார் ரவீந்தர்.
லிப்ரா புரடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில தமிழ் படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். பட பணிகளில் மட்டுமே, கவனம் செலுத்த அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி, வாண்டடாக பிரபலங்களை வம்பிழுக்கும் செயலையும் சிறப்பாக செய்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக விஜயக்குனர் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகளான, வனிதா விஜயகுமார்... கடந்த சில வருடங்களுக்கு, தொழில் ரீதியாக தனக்கு அறிமுகமான, பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டபோது, பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும் சில சர்ச்சை கருத்துகளை அடுத்தடுத்து தெரிவித்து வந்தார்.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்து மழையால் திக்குமுக்காடிப் போன நட்சத்திர ஜோடி
பீட்டர் பால் அவரது முதல் மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை கிறிஸ்த்தவ முறைப்படி திருமணம் செய்தார். எனவே முதல் மனைவிக்கு நியாயம் வேண்டும் என போர் கோடி தூக்கியவர்களில் இவரும் ஒருவர்.
வனிதாவை அன்று விமர்சித்த ரவீந்தர் இன்று, சீரியல் நடிகை மகாலக்ஷ்மியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதற்கு, பலரும் ரவீந்தர் பணக்காரர் என்பதால் தான் மஹாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி வருகிறார்கள். அதற்க்கு ஏற்ற போல் மகாலட்சுமிக்கு சுமார் 75 லட்சத்தில் பெரிய மாலைகள், சுமார் 300 பட்டு புடவைகள், விதவிதமான தங்க நகைகள் மற்றும் தங்கத்தினால் இழைக்கப்பட்ட கட்டில் போன்றவற்றை ரவீந்தர் மகாலட்சுமிக்கு பரிசாக கொடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவியது.
மேலும் செய்திகள்: கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ
ஆனால் இதற்க்கு இவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படாத நிலையில், வனிதா தங்களுடைய திருமணம் குறித்து "அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரமில்லாத அளவுக்கு மகிழ்ச்சியாகவும், பிசியாகவும் இருக்கிறேன். கர்மா ஒரு B***H. அவளுக்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெரியும், நான் அவளை முழுமையாக நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இவரது இந்த பதிவுக்கு தான் தற்போது, பதிலடி கொடுத்துள்ளார் ரவீந்தர். நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசிகர்களுடன் லைவில் கலந்துரையாடிய ரவீந்தர், ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னதாக திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார் பின்னர் வனிதாவின் விமர்சனந்திக்கு பதிலளித்த இவர், "வனிதாவின் ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை" என நச் என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: தாறுமாறு சாதனை செய்த சூர்யாவின் மோஷன் போஸ்டர்..! சும்மா அதிர விடும் ரசிகர்கள்.!