தல, தளபதி மாதிரி பிக் பாஸ் புயல் ராணவ்விற்கு கிடைத்த அடைமொழி! என்ன தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராணவ்விற்கு ரவீந்தர் ஒரு அடைமொழி வைத்திருக்கிறார்.

நடிகர்களின் அடைமொழி
சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளுக்கு அடைமொழி வைத்து அழைக்கும் பழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. எம்ஜிஆரை புரட்சிக் தலைவர் என்றும், சிவாஜி கணேசனை நடிகர் திலகம் எனவும், ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலகநாயகன், விஜய்க்கு தளபதி, அஜித்துக்கு அல்டிமேட் ஸ்டார், விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன், நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார், நடிகர் விஷாலுக்கு புரட்சி தளபதி என ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு அடைமொழி இருந்து வருகிறது.
பிக் பாஸ் ராணவ்
மேற்கண்ட நடிகர்கள் எல்லாம் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க உயரத்தை அடைந்த பின்னர் தான் அவர்களுக்கு அடைமொழி கிடைத்தது. ஆனால் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முன்னரே ஒருவருக்கு அடைமொழி கிடைத்திருக்கிறது. அவர் வேறுயாருமில்லை பிக் பாஸ் புகழ் ராணவ் தான். இவர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து அந்த வீட்டில் தனி ஒருவனாக செயல்பட்டு 75 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார்.
இதையும் படியுங்கள்... கமலை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி; டிஆர்பி-யில் சாதனை படைத்த பிக் பாஸ் 8 பைனல்
ராணவ்விற்கு அடைமொழி
பிக் பாஸ் வீட்டில் தான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு செயல்களை செய்துவந்தார் ராணவ். அதுவே அவருக்கு பின்னடைவாகவும் அமைந்தது. ஒருகட்டத்தில் டாஸ்கில் அடிபட்டு கை உடைந்தபோது அவர் வலியால் கத்தியும், அவர் நடிக்கிறார் என்று சக போட்டியாளர்கள் அவரை கிண்டல் செய்தனர். கை உடைந்ததன் காரணமாக அவரால் டிக்கெட் டூ பினாலே டாஸ்கை வெல்ல முடியாமல் போனது. ஒருவேளை கையில் அடிபடாமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் பைனலுக்கு சென்றிருப்பார்.
புரட்சிப்புயல் ராணவ்
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற ராணவ், சினிமாவிலும் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடித்துள்ள படம் ஒன்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ராணவ்விற்கு அடைமொழி ஒன்றை வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அதன்படி அவருக்கு புரட்சிப் புயல் என அடைமொழி கொடுத்திருக்கிறார். இசைப்புயல், நடனப்புயல் வரிசையில் புரட்சிப் புயலாக களமிறங்கி உள்ள ராணவ் சினிமாவில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... பவித்ரா பிறந்தநாள்; கும்பலாக வந்து கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்!