பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் - காரணம் என்ன?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கெஸ்டாக உள்ளே வந்த ரவீந்தர் சந்திரசேகர் விதிகளை மீறியதால் அவரை உடனடியாக வெளியே அனுப்பி உள்ளனர்.
Ravindar
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நெருங்கிவிட்டது. தற்போது செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், தீபக், அருண், விஷால், பவித்ரா, ரயான் ஆகிய 8 போட்டியாளர்கள் தான் களத்தில் உள்ளனர். இதில் புது ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன முதல் 8 போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் நடத்தி ஒரு போட்டியாளரை வெளியேற்றலாம் என்கிற பவரையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.
Bigg Boss Tamil season 8
அதன்படி சுனிதா, வர்ஷினி, ரவீந்தர், ரியா, அர்னவ், தர்ஷா குப்தா, சாச்சனா, ஷிவக்குமார் ஆகிய 8 பேர் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்ததும், போட்டியாளர்களுக்கு வெளியுலகில் என்ன நடக்கிறது. யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி லைட்டாக ஹிண்ட் கொடுத்தனர். இதில் மற்ற 7 பேர் குறைகளை மட்டுமே அதிகம் சொன்னார்கள். ஆனால் ரவீந்தர் தான் அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் நன்கு பாசிட்டிவ் ஆக சொன்னார். இதனால் 8 போட்டியாளர்களும் சந்தோஷம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள மிட் வீக் எவிக்ஷன்! வெளியே செல்ல உள்ளது யார்?
Bigg Boss Contestants
அதிலும் நேற்று வந்தவர்களில் அர்னவ் தான் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார். உள்ளே வந்ததும் ஜால்ராஸை வச்சு செய்ய உள்ளதாக கூறிய அவர், பின்னர் போட்டியாளர்கள் முன் பேசுகையில் சத்யா பற்றியும் ஜெஃப்ரி பற்றியும் மிகவும் கீழ்தரமாக பேசி இருந்தார். இதனால் முகம் சுழித்த முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் அர்னவ்வை தடுத்து நிறுத்தி ஒழுக்கமாக பேசினால் தான் கேட்போம், இல்லாவிட்டால் கிளம்பிவிடுவோம் என்று வார்னிங் கொடுத்த பின்னரும் அருணிடம் சண்டையிடும் தொனியில் பேசினார் அர்னவ்.
Ravindar breaks Bigg Boss Rules
நேற்று உள்ளே வந்த 8 பேரும் வெளியுலகில் நடக்கும் விஷயங்களை புட்டு புட்டு வைத்ததால் இதற்கு எண்டு கார்டு போடும் விதமாக, பிக் பாஸ் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அது என்னவென்றால், இதற்கு மேல் வெளியுலக விஷயங்களைப் பற்றி பேசினால் அந்த போட்டியாளர் உடனடியாக வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. பிக் பாஸின் இந்த வார்னிங்கையும் மீறி இன்று காலை தீபக் மற்றும் ரயானிடம் வெளியே யாருக்கு அதிகப்படியான வாக்கு வங்கி இருக்கிறது என்பது பற்றி பேசி இருக்கிறார் ரவீந்தர். இதனால் அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், நீங்கள் விதிகளை மீறிவிட்டதால் வெளியேற்றப்படுவதாக அறிவிக்க, ரவீந்தர் கண்ணீர் விட்டு கலங்கி அழுதிருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... நீ பேசுறதெல்லாம் கேட்க முடியாது; கிளம்பு! பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் பல்பு வாங்கிய அர்னவ்