- Home
- Cinema
- Chhaava : பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
Chhaava : பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
Chhaava Box Office Collection Day 4 Report Tamil : விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காம்பினேஷனில் வெளியான சாவா 4 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.164.75 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
Chhaava Box Office Collection Day 4 Report Tamil : பாலிவுட் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனிமல் படத்திற்கு பிறகு நேரடியாக ஹிந்தி படத்தில் நடித்து வெளியான படம் தான் சாவா. லக்ஷ்மண் உத்தேகர் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல், அக்ஷய கண்ணா ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் சாவா. படம் வெளியானது முதல் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நாளில் ரூ.31 கோடி வசூல் குவித்த சாவா, 2ஆவது நாளில் ரூ.36.5 கோடி வசூல் குவித்தது. 3ஆவது நாளில் 48.5 கோடி குவித்து 3 நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.116 கோடி வசுல் குவித்து உலகளவில் 150 கோடி வசூலை எட்டியது.
பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
இந்த நிலையில் 4ஆவது நாளான நேற்று 24 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இதன் மூலமாக இந்திய அளவில் ரூ. 140 கோடியும், உலகளவில் ரூ.174 கோடி வரையிலும் வசூல் குவித்து 200 கோடி வசூல் சாதனையை நெருங்கி வருகிறது. படத்தில் பட்ஜெட் ரூ.130 கோடி என்ற நிலையில் இப்போது செலவை விட அதிக வசூல் குவித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துள்ளது.
பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் சத்ரபதி சிவாஜியின் மகன். படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். படத்தில் அவர் நடித்த சாம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்திற்கு பாராட்டு கிடைத்து வருகிறது. மேலும், ரஷ்மிகா மந்தனா சாம்பாஜி மகாராஜாவின் மனைவி யேசுபாயாக நடித்துள்ளார்.
Kumbh 2025 : காவி உடை, ருத்ராட்ச மாலை அணிந்து மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!
பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
ஹிந்தியில் மட்டுமே வெளியான சாவா விரைவில் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாவா நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் விரைவில் ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது. சாவா’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் அதிக விலைக்கு வாங்கியுள்ளது. சராசரி வரவேற்பு கிடைத்தால் ஒரு மாதத்தில் OTTயில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், படம் பெரிய வெற்றி பெற்றதால், OTT வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது. எட்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் ஹிட் மூவி: வசூல் வேட்டையில் சாவா: 4 நாட்களில் ரூ.164.75 கோடி வசூல்!
சத்ரபதி சிவாஜி மறைவுக்குப் பிறகு, மராத்திய சாம்ராஜ்யம் பலவீனமடைந்ததாக முகலாய மன்னர் ஔரங்கசீப் கருதுகிறார். ஆனால், சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் அவருக்கு எதிராக எழுகிறார். முகலாயர்களிடமிருந்து சாம்பாஜி எவ்வாறு போராடினார் என்பதே கதை.
Madharasi : ஷூட்டிங் முடியும் முன்பே கோடிகளை குவிக்கும் மதராஸி; SK படத்துக்கு இம்புட்டு டிமாண்டா?