மண மேடையை மாற்றிக் கொண்ட ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா... திருமண நாளில் திடீர் ட்விஸ்ட்..!
பிப்ரவரி 26 ஆம் தேதி ராஷ்மிகாவும் விஜய்யும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.

உதய்பூர் அரண்மனையில் திருமணம் ?
நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்த தகவல்கள் வெகுகாலமாகவே பரபரப்பை கிளப்பி ஏற்படுத்தி வருகின்றன. இருவரும் பிப்ரவரி 2 ஆம் தேதி உதய்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. இப்போது, ரஷ்மிகாவே திருமண வதந்திகளுக்கு பதிலளித்து, அதை ஒரு வதந்தி என்று தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான ரீல்-லைஃப் ஜோடியை நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாகப் பார்க்க அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்களது திருமணம் நீண்ட காலமாக செய்திகளில் அடிபட்டு வருகிறது. தென்னிந்தியாவின் ஃபேமஸான ஜோடி பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கட்கிழமை திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
திருமண ஏற்பாடுகள்
இது குறித்து முக்கிய நபர் ஒருவர் அவரது வீடியோவில், ரஷ்மிகா உதய்பூர் அரண்மனைக்குச் சென்றதாகக் கூறினார், அங்கு ஒரு இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அது ராஷ்மிகா மற்றும் விஜய் தேவகொண்டா திருமணத்திற்கான ஏற்பாடுகள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த திருமண வதந்திகளை பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. இந்த வதந்திகளுக்கு ராஷ்மிகாவே முற்றுப்புள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது. திருமண வதந்திகளுக்கு ராஷ்மிகா மந்தனா தனது பதிலை தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம்
‘‘விஜய் தேவரகொண்டாவுடனான எனது திருமணம் குறித்த தகவல்கள் வதந்தி. பிப்ரவரி 2 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், புதிய தேதி குறித்த விவாதங்கள் தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளன. பிப்ரவரி 26 ஆம் தேதி ராஷ்மிகாவும் விஜய்யும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.
2017ல் நிச்சயதார்த்தம்
ராஷ்மிகாவோ அல்லது விஜய் தேவரகொண்டாவோ தங்கள் திருமணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரஷ்மிகா மந்தமாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு சற்று முன்பு, 2018-ல் அவர்களது நிச்சயதார்த்தம் முறிந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, ரஷ்மிகா தனது நடிப்பில் கவனம் செலுத்த விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரக்ஷித் இந்த முடிவை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. அவர்களால் தங்கள் எதிர்காலம் குறித்து உடன்பட முடியவில்லை. இறுதியில், திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் விடைபெற்றுக்கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
