1000 கோடி வசூல் மன்னன் உடன் இணையும் ரஜினி; ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா!
1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருடன் ரஜினிகாந்த் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

ரஜினி படத்தில் ராஷ்மிகா
பான் இந்தியா அளவில் பிசியான நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. புஷ்பா 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து 2 படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதில் ஒரு படம் சவ்வா. இப்படத்தில் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது.
ராஷ்மிகா லைன் அப்
இதுதவிர ராஷ்மிகா கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் சிக்கந்தர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் மற்றுமொரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்திலும் சல்மான் கானுக்கு ஜோடியாக தான் நடிக்க உள்ளாராம் ராஷ்மிகா. அப்படத்தையும் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் தான் இயக்க இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சாவா ட்ரெய்லர் ராஷ்மிகாவின் நடனக் காட்சியால் சர்ச்சை!!
சல்மான் கான் ஜோடி ராஷ்மிகா
அவர் வேறுயாருமில்லை... ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் ஜவான் என்கிற 1000 கோடி வசூல் படத்தை கொடுத்த அட்லீ தான். அவர் அடுத்ததாக இயக்க உள்ள பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம்.
அட்லீ இயக்கத்தில் ரஜினிகாந்த்
முதலில் இப்படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அட்லீ. ஆனால் அவர் ஓகே சொல்லாததால் தற்போது ரஜினியை நாடி இருக்கிறார். அட்லீ ஏற்கனவே ரஜினி நடித்த எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன்பின்னர் இயக்குனர் ஆன பின்னர் அவர் ரஜினியுடன் பணியாற்ற உள்ள முதல் படம் இதுவாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஓய்வு பற்றி பேசி ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா? சாவா டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி!