சாவா ட்ரெய்லர் ராஷ்மிகாவின் நடனக் காட்சியால் சர்ச்சை!!
ரஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் நடிக்கும் 'சாவா' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நடனக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுப் படமாக இருப்பதால், சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
Rashmika Mandanna Dance
லக்ஷ்மண் உதேக்கர் இயக்கத்தில் 'சாவா' என்ற பாலிவுட் படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விக்கி கௌஷல் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டது. சமீபத்தில் வெளியான டிரெய்லரில் இடம்பெற்றுள்ள விக்கி கௌஷல், ரஷ்மிகாவின் நடனக் காட்சி விமர்சிக்கப்படுகிறது. சிலர் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Rashmika Mandanna
படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சாம்பாஜிராஜே சத்ரபதி கூறியுள்ளார். சத்ரபதி சாம்பாஜி மகாராஜா, மகாராணி யேசுபாய் வேடங்களில் நடித்த விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா இடையேயான நடனக் காட்சி மராத்திய சில குழுக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
Rashmika Mandanna Dance
இந்த வார தொடக்கத்தில் வெளியான டிரெய்லரில், மகாராஷ்டிராவின் கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய பாரம்பரிய இசைக்கருவியான 'லெஜிம்'மைக் கொண்டு கௌஷலும் மந்தனாவும் நடனமாடுகிறார்கள். இந்தப் பாடல் தான் இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
Rashmika Mandanna Dance
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை மற்றும் அவரது வீரமிக்க ஆட்சியை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது. இயக்குனர் லக்ஷ்மண் உதேக்கர் மற்றும் அவரது குழுவினர் எனக்கு டிரெய்லரைக் காட்டினர். படம் வெளியாவதற்கு முன்பு முழுப் படத்தையும் பார்க்க விரும்புகிறேன். வரலாற்று ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வரலாற்று ஆய்வாளர்களுடன் கலந்துரையாடவும் நான் தயாராக இருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த முக்கியமான கதையை நம்பகத்தன்மையுடன் வழங்குவதே எனது நோக்கம்" என்று சாம்பாஜிராஜே சத்ரபதி கூறினார்.
Rashmika Mandanna Dance
நேஷனல் கிரஷ் என்று கருதப்படும் ரஷ்மிகா மந்தனா பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். அவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த அனிமல் படம் நல்ல வரவேற்பை பெற்றது.. இப்போது 'சாவா' படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி நடிக்க, சாம்பாஜியின் மனைவி மகாராணி யேசுபாயாக ரஷ்மிகா நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ரஷ்மிகா, "தென்னிந்தியாவிலிருந்து வந்து மகாராணி யேசுபாய் வேடத்தில் நடித்திருக்கிறேன். இது என் வாழ்க்கையில் நான் செய்த மிகவும் சிறப்புமிக்க கேரக்டர். இந்தப் படத்திற்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று இயக்குனர் லக்ஷ்மனிடம் சொன்னேன்" என்று கூறியுள்ளார். '
சாவா' டிரெய்லர் என்னை ஈர்த்தது. விக்கி கௌஷல் கடவுள் போல இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rashmika Mandanna
ரஷ்மிகா மந்தனா தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2' ப்டம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இப்படம் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கன்னடத் திரையுலகிலிருந்து வந்த ரஷ்மிகா தெலுங்கில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். பான் இந்தியா படங்களில் கதாநாயகியாக நடித்து சிறந்து விளங்குகிறார். சமீபத்தில் சினிமாவில் இருந்து பெறுவது ஓய்வு குறித்து ரஷ்மிகா கூறிய கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .