சாலையோர மக்கள் 1200 பேருக்கு உணவு வழங்கிய ராஷி கண்ணா..! குவியும் பாராட்டு..!
தமிழில், நடிகை நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் அறிமுகமாகி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும்... இவர் தற்போது ஹைதராபாத்தில் சாலையோரம் உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு பழங்கள் மற்றும் பிரெட் போன்ற உணவு பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக இவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

<p>டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது. </p>
டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது.
<p>அறிமுகம் இமைக்கா நொடிகள் படம் என்றாலும், அதை தொடர்ந்து... தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.</p>
அறிமுகம் இமைக்கா நொடிகள் படம் என்றாலும், அதை தொடர்ந்து... தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.
<p>சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் ஆர்வம் கொண்ட இவர், தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, உணவில்லாமல் சாலையோரம் இருக்கும் மக்களை தேடி சென்று உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.</p>
சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் ஆர்வம் கொண்ட இவர், தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, உணவில்லாமல் சாலையோரம் இருக்கும் மக்களை தேடி சென்று உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
<p>ராஷி கண்ணா, Be the miracle என்கிற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை செய்துள்ளார். இதற்காக கஷ்டப்படும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு தேடி சென்று, பழங்கள் மற்றும் ஸ்டோர் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு சாப்பிடக்கூடிய பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளை சுமார் 1200 பேருக்கு வழங்கியுள்ளனர். ராஷி கண்ணாவின் இந்த செயலுக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். </p>
ராஷி கண்ணா, Be the miracle என்கிற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை செய்துள்ளார். இதற்காக கஷ்டப்படும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு தேடி சென்று, பழங்கள் மற்றும் ஸ்டோர் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு சாப்பிடக்கூடிய பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளை சுமார் 1200 பேருக்கு வழங்கியுள்ளனர். ராஷி கண்ணாவின் இந்த செயலுக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.