MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணத்துக்கு பின் ராம்சரண் உடன் முத்தக்காட்சி... சமந்தாவின் லிப்லாக் சீன் ரகசியத்தை உடைத்த சுகுமார்!

திருமணத்துக்கு பின் ராம்சரண் உடன் முத்தக்காட்சி... சமந்தாவின் லிப்லாக் சீன் ரகசியத்தை உடைத்த சுகுமார்!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க தனக்கு விருப்பமே இல்லை என சுகுமார் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 01 2026, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரங்கஸ்தலம் மூவி சீக்ரெட்
Image Credit : Asianet News

ரங்கஸ்தலம் மூவி சீக்ரெட்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஒரு மாஸ்டர்பீஸ் திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் சமந்தா நடித்த இந்த படம், டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. இதில் சிட்டி பாபு என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
25
சமந்தாவை விருப்பமின்றி கமிட் செய்தேன்
Image Credit : Asianet News

சமந்தாவை விருப்பமின்றி கமிட் செய்தேன்

ரங்கஸ்தலம் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வைரலாகி வருகின்றன. ஒரு பேட்டியில் பேசிய சுகுமார், இந்தப் படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க தனக்கு முதலில் விருப்பம் இல்லை என்று கூறினார். ஒரு புதுமுகம் அல்லது சாதாரண ஹீரோயினை நடிக்க வைக்கவே அவர் விரும்பியுள்ளார்.

Related Articles

Related image1
திருமணத்துக்கு பின்னர் பெயரை மாற்றிய சமந்தா? இனி டைட்டில் கார்டில் இந்த பெயர்தானாம்...!
Related image2
இது அதுல்ல... அஜித் படத்தை காப்பியடித்துள்ளாரா சமந்தா? விமர்சிக்கப்படும் ‘மா இன்டி பங்காரம்’ டீசர்
35
சுகுமார் புகழாரம்
Image Credit : Asianet News

சுகுமார் புகழாரம்

சில காரணங்களால் சமந்தாவையே நடிக்க வைக்க வேண்டியதாயிற்று. ராம் சரண், சமந்தா இருவருமே பெரிய ஸ்டார்கள் என்பதால், செட்டில் அவர்களைச் சமாளிக்க முடியாது என நினைத்ததாக சுகுமார் கூறினார். ஆனால், சமந்தாவின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தன் கன்னத்தில் அறைவது போல இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ப்ரீ-ரிலீஸ் விழாவில்கூட, இனி சமந்தாவுடன் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியதாக சுகுமார் தெரிவித்தார்.
45
முத்தக்காட்சி பின்னணி என்ன?
Image Credit : our own

முத்தக்காட்சி பின்னணி என்ன?

படப்பிடிப்பின்போது சமந்தாவுக்குத் திருமணமாகி இருந்தது. ஆனாலும், அவர் லிப்லாக் காட்சியில் நடித்தார். இதுபற்றிப் பேசிய சுகுமார், 'அந்தக் காட்சியைப் படமாக்கும்போது சமந்தாவின் திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை. காதலை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாத ஒரு சூழலில், முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துவதாக அந்தக் காட்சி அமைந்தது. அதை ஒரு கலையாக மட்டுமே பார்க்க வேண்டும்' என்றார்.
55
சுகுமார் விளக்கம்
Image Credit : our own

சுகுமார் விளக்கம்

80-களில் இவ்வளவு ரொமான்ஸ் இருந்ததா என தொகுப்பாளர் கேட்டதற்கு, 'நீங்கள் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களுக்குப் புரியும்' என சுகுமார் பதிலளித்தார். 'அப்போதெல்லாம் சல்லாபம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது. அதை யாரும் ஆபாசமாகப் பார்க்கவில்லை' என்றும் அவர் விளக்கினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை..!
Recommended image2
நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
Recommended image3
தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 மூவீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
திருமணத்துக்கு பின்னர் பெயரை மாற்றிய சமந்தா? இனி டைட்டில் கார்டில் இந்த பெயர்தானாம்...!
Recommended image2
இது அதுல்ல... அஜித் படத்தை காப்பியடித்துள்ளாரா சமந்தா? விமர்சிக்கப்படும் ‘மா இன்டி பங்காரம்’ டீசர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved