மாதந்தோறும் கோடிகளில் அள்ளும் ரம்யா கிருஷ்ணன்; எப்படி தெரியுமா?
Ramya Krishnan Monthly Income : படையப்பா நீலம்பரியான ரம்யா கிருஷ்ணன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் அவரது மாத வருமானம் கோடிகளில் இருக்கிறது. எப்படி வருகிறது? மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
Ramya Krishnan Monthly Income 5 Crores : சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர், மறைந்த காமெடி நடிகர் சோவின் உறவினர். ஒரு வகையில் பார்த்தால் மருமகள். வெள்ளை மனசு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பார்த்த ஞாபகம் இல்லையோ, படிக்காதவன், ஆண்களை நம்பாதே, பேர் சொல்லும் பிள்ளை, சத்ய வாக்கு, கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, பாட்டாளி, படையப்பா, ராஜகாளி அம்மன், நரசிம்மா, வந்தா ராஜாவா தான் வருவேன், ஜெயிலர் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
இதில், கேப்டன் பிரபாகரன், படையப்பா, நரசிம்மா, வந்தா ராஜாவா தான் வருவேன், ஜெயிலர் என்று எல்லா படங்களுமே அவரது நடிப்பை பெரியளவில் பேசியது. இதில், படையப்பா படம் தான் அவருக்கு நீலாம்பரி என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்துள்ளார். அழகு, நடிப்பு, திறமை என்று எல்லாவற்றிலும் மூலமாக தமிழ் சினிமாவை ஆண்டு வந்தார் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 41 ஆண்டுகாலமாக சினிமாவில் காலூன்றி வந்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், வடிவேலு என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக மட்டுமின்றி வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
அவ்வப்போது பலமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு `பாகுபலி` படம் திருப்பு முனையாக அமைந்தது. சிவகாமி கதாபாத்திரத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 50 வயதைக் கடந்த ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் படங்கள் குறைவு. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கிறார். ஆனால் அவரது வருமானம் கோடிகளில் உள்ளது. மாதம் ஐந்து கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
கேரளாவில் ரம்யா கிருஷ்ணனுக்கு 5 அழகு நிலையங்கள் உள்ளன. ஹைதராபாத்தில் மூன்று நகைக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் அவருக்கு மாதம் 5 கோடி வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. இந்தக் கணக்கின்படி, ரம்யா கிருஷ்ணனுடன் ஒப்பிடும்போது முன்னணி நடிகர்களின் வருமானம் குறைவுதான். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் இவை. ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் `குண்டுர் காரம்`, `புருஷோத்தமன்`, ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.