- Home
- Cinema
- நடிகையுடன் வீட்டில் தங்கியிருந்ததால் ஆத்திரம்.. 60 வயது நடிகரை செருப்பால் அடிக்க வந்த மனைவி - பரபரப்பு சம்பவம்
நடிகையுடன் வீட்டில் தங்கியிருந்ததால் ஆத்திரம்.. 60 வயது நடிகரை செருப்பால் அடிக்க வந்த மனைவி - பரபரப்பு சம்பவம்
Naresh Pavithra Lokesh : நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு, இவரது சகோதரரான நரேஷ் பாபுவும் சினிமாவில் நடித்து வருகிறார். 60 வயதாகும் நரேஷ் பாபு இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ளார். இதில் இரண்டு முறை விவாகரத்து பெற்ற நரேஷ் பாபு, தற்போது மூன்றாவது மனைவியுடன் சண்டை வந்ததால் விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Ramya Pandian : காட்டுக்குள் கவர்ச்சி போஸ்... வைரலாகும் இடுப்பழகி ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்
Naresh-Pavitra Lokesh
அதுமட்டுமின்றி நடிகர் நரேஷ் பாபு 4-வது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும், அவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷை 4-வதாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன. நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.
இதையும் படியுங்கள்... மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..
நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்ததற்கு காரணமே பவித்ரா லோகேஷ் தான் என தெரிவித்த ரம்யா, தனக்கும் ரமேஷுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி... வைரலாகும் கிளாமர் போட்டோ
இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா. இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.