சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி... வைரலாகும் கிளாமர் போட்டோ
Anjali : புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அணிந்திருந்தது போல் படுகவர்ச்சியான உடை அணிந்தபடி தெலுங்கு படம் ஒன்றில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார் அஞ்சலி.
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.
இதையும் படியுங்கள்... சிம்ரன் முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ஷாக் கொடுத்த நடிகைகள் - ஒரு பார்வை
இதையடுத்து வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய அஞ்சலி, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சைலன்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்றார்.
இதையும் படியுங்கள்... Amala Paul : இரண்டாவது திருமணம் எப்போது? - முதன்முறையாக மறுமணம் குறித்து மனம்திறந்த அமலா பால்
அங்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் RC 15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதுதவிர ஜான்சி என்கிற வெப் தொடர் ஒன்றிலும் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர வேறு எந்த படங்களும் கைவசம் இல்லாததால் நடிகை அஞ்சலி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை இறுக்கி அணச்சு போஸ் கொடுத்த விக்கி... போட்டோ பார்த்து புலம்பித் தள்ளும் நெட்டிசன்கள்
அந்த வகையில் அவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்கிற படத்தில் தான் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அணிந்திருந்தது போல் படுகவர்ச்சியான உடை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி. இந்த பாடல் ரிலீசான பின்னராவது நடிகை அஞ்சலிக்கு பட வாய்ப்பு குவியுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.