cow தாத்தானு தான் கூப்பிடுவான்... வெளிநாட்டில் என் போஸ்டர் பார்த்து பேரன் செய்த செயல் - நெகிழ்ந்துபோன ராமராஜன்
நடிகர் ராமராஜன் தனது பேரன் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.
ramarajan
தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர்களில் ராமராஜனும் ஒருவர். 1980-களில் ராமராஜன் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருந்து வந்தார். ரஜினி, கமல் என இருபெரும் துருவங்கள் கோலோச்சி வந்த அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக தன் படங்களை வெளியிட்டு கெத்து காட்டினார் ராமராஜன். குறிப்பாக இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது.
Ramarajan, Nalini
அந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள், இளையராஜாவின் பாடல்கள் மற்றும் ராமராஜன், கனகாவின் நடிப்பு என அனைத்தும் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு அது ஒரு மாஸ்டர் பீஸ் படமாக உள்ளது. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த ராமராஜன் கடந்த 1987-ம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான 13 ஆண்டுகளில் இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இருவருமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். தற்போது சினிமாவில் கம்பேக் கொடுத்து சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வரும் ராமராஜன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பேரன் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து மனம்திறந்து பேசி இருந்தார் ராமராஜன்.
இதையும் படியுங்கள்... சாதி, மதம் பார்க்காம குழந்தைகளை படிக்கவையுங்கடா... தேவர்மகன் சர்ச்சை குறித்து நடிகர் சதீஷ் பேட்டி
ramarajan
அதன்படி, நடிகர் ராமராஜனின் மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறாராம். அங்கு அவர் குடும்பத்துடன் உணவகம் ஒன்றிற்கு சென்றபோது அங்கு தமிழ் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து வியந்துபோனாராம். இதில் ஹைலைட்டே அவரது தந்தை நடித்த கரகாட்டக்காரன் பட போஸ்டரும் அங்கு தனியாக வைத்திருந்தார்களாம்.
இதைப்பார்த்ததும் அங்குள்ள ஓட்டல் உரிமையாளரிடம் போய் பேசினாராம் ராமராஜனின் மகன் அருண். அப்போது தான் அவரும் தன்னுடைய தந்தையின் ஊரான சொக்கம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவர, அந்த ஓட்டல் உரிமையாளரும், நீங்க பார்க்க அப்பா ராமராஜன் மாதிரியே இருக்கிங்க என சிலாகித்து பேசிக்கொண்டிருந்தாராம்.
ramarajan
அந்த நேரத்தில் ராமராஜனின் பேரன் அங்கிருந்த போஸ்டர்களையெல்லாம் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பினாராம். செண்பகமே செண்பகமே பாட்டு பார்த்ததில் இருந்து ராமராஜனை அவரது பேரன் cow தாத்தானு தான் கூப்பிடுவானாம். அவர் என்னுடைய போஸ்டரை வெளிநாட்டில் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதாகவும், அந்த வீடியோ பார்க்கையில் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நான் நடிச்சதே கொஞ்ச படங்களாக இருந்தாலும், அது வெளிநாடு வரை பரவி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி ராமராஜன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதிர்பாரா டுவிஸ்ட்... முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் யார் தெரியுமா?