விடாமல் துரத்தும் போதை பொருள் விவகாரம்..! ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 முன்னணி நடிகைகளுக்கு சம்மன்!
போதை பொருள் விவகாரத்தில் அதிரடியாக நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், சில நடிகைகளின் பெயரை வெளியிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அதிரடியாக நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
நடிகையும், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சத்ராபார்த்தியிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பின், அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்தனர்.
இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தொடர்ந்து, பல பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 25 பாலிவுட் பிரபலங்களின் பெயரை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லிஸ்ட் எடுத்து வைத்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
என்.சி.பி.யின் விசாரணையில் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த லிஸ்டில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலில், போதை பொருள் விவகாரம் தொடர்பாக, தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், மற்றும் சாரா அலிகான் ஆகிய நான்கு பேருக்கு சம்மன் அனுப்பட்டடுள்ளது.
இவர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது, திரையுலகினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.