- Home
- Cinema
- Rajisha vijayan Photos : சிக்குன்னு சேலையில்! கவர்ச்சிக்கு குறைவைக்காத கர்ணன் பட நடிகை ரஜிஷாவின் ஹாட் போட்டோஸ்
Rajisha vijayan Photos : சிக்குன்னு சேலையில்! கவர்ச்சிக்கு குறைவைக்காத கர்ணன் பட நடிகை ரஜிஷாவின் ஹாட் போட்டோஸ்
கர்ணன், ஜெய் பீம் படங்களில் நடித்து அசத்திய ரஜிஷா விஜயன் (Rajisha vijayan) தற்போது சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் ரஜிஷா விஜயன், இவர் கடந்த 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரஜிஷா, அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்று அசத்தினார்.
மலையாளத்தில் இளம் நடிகையாக ஜொலித்து வந்த அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கர்ணன் படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்திய ரஜிஷா, தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பில் பிசியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வரும் ரஜிஷா, தற்போது புடவையில் கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.