உங்களோட படம் பண்ணது ஒரு அதிசயம் அப்பா... லால் சலாம் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி குறித்து ஐஸ்வர்யா நெகிழ்ச்சி
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
Lal Salaam
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Lal Salaam
மேலும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாட்ஷா படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் லால் சலாம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... அரசியல் கனவில் இருக்கும் விஜய்யை முதல்வனாக்க பிளான் போடும் ஷங்கர்? 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ் கூட்டணி
Lal salaam
லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முதலில் மும்பையில் படமாக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த படக்குழு, அங்குள்ள மில் ஒன்றில் சில நாட்கள் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கியது. இதையடுத்து இறுதியாக திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்து லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார்.
Lal salaam
இந்நிலையில், தற்போது லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முழுமையாக படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளதாவது : உங்களை வைத்து படம் இயக்குவது என்பது ஒரு அதிசயம். நீங்கள் ஒரு மேஜிக் அப்பா. லால் சலாம் மொய்தீன் பாய் காட்சிகள் முடிவடைந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... என் பாடல் வரிக்கா கத்திரி போடுறீங்க! சென்சார் போர்டுக்கே தண்ணி காட்டி.. நா.முத்துக்குமார் செய்த தரமான சம்பவம்