டிராகன் பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவின் கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்!
டிராகன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருக்கிறார்.

Rajinikanth Watched Dragon Movie : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படத்தை பார்த்த கையோடு இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் தனக்கு ரெஸ்ட் கிடைக்கும் நேரங்களில் புதுப்படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். அப்படி தான் பார்க்கும் படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு வாழ்த்துவார்.
Dragon
அந்த வகையில் சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து பிப்ரவரி 21-ந் தேதி திரைக்கு வந்து திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வரும் டிராகன் படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். படமும் சூப்பர்ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இதையும் படியுங்கள்... 100 கோடி கிளப்பில் இணைந்த டிராகன்; 2025-ல் வசூலில் செஞ்சுரி அடித்த டாப் 8 படங்கள் லிஸ்ட் இதோ
Rajinikanth watched Dragon Movie
ரஜினியை சந்தித்தபோது, என்ன அஷ்வத் இப்படி எழுதியிருக்க, ஃபெண்டாஸ்டிக்.. ஃபெண்டாஸ்டிக் என சிலாகித்து வாழ்த்தினாராம். நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டனும். அவர் நம்ம படத்தை பற்றி பேச வேண்டும் என்பது இயக்குனராக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒவ்வொரு உதவி இயக்குனரின் கனவு. என்னுடைய கனவு நிறைவேறிய நாள் இன்று என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அஷ்வத்.
Rajinikanth, pradeep ranganathan
வழக்கமாக இதுபோன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களிடம் ரஜினி, கதை கேட்பதுண்டு. அதேபோல் அஷ்வத்திடமும் கதை கேட்டிருக்கக் கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக லவ் டுடே படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற போது பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினி, தற்போது அவரின் டிராகன் படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகி வாழ்த்தி இருக்கிறார். இதனால் டிராகன் படக்குழு செம ஹாப்பியாக உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... Pradeep Love Story: அந்த ஒரு வார்த்தையால் என் காதல் முறிந்தது; கலங்க வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் ஸ்டோரி!