- Home
- Cinema
- Thalaivar 169 : மொதல்ல அத கொண்டு வாங்க... அப்புறம் ஷூட்டிங் போலாம் - ரஜினி போட்ட கண்டிஷனால் ஆடிப்போன நெல்சன்
Thalaivar 169 : மொதல்ல அத கொண்டு வாங்க... அப்புறம் ஷூட்டிங் போலாம் - ரஜினி போட்ட கண்டிஷனால் ஆடிப்போன நெல்சன்
Thalaivar 169 : நெல்சன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் கலக்கமடைந்த ரஜினி, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு வந்தாராம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், தனது அடுத்த படத்திற்கான கதைத்தேர்வில் கவனம் செலுத்தி வந்த ரஜினி, இளம் இயக்குனர்கள் முதல் அனுபவ இயக்குனர்கள் வரை ஏராளமானோரிடம் கதை கேட்டார்.
இறுதியில் இயக்குனர் நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போனதால் அவருக்கு தனது 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நெல்சன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் கலக்கமடைந்த ரஜினி, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு வந்தாராம். பின்னர் அனிருத் பேசி ரஜினியை சமாதானம் செய்ததை அடுத்த நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னாராம் ரஜினி.
நெல்சனுக்கு ஓகே சொன்னாலும், அவருக்கு ஒரு கண்டிஷனையும் போட்டுள்ளாராம் சூப்பர்ஸ்டார். அது என்னவென்றால், படத்தின் முழுமையான திரைக்கதையை ரெடி பண்ணி கொடுக்குமாறும், அதனை படித்த பின்னரே ஷூட்டிங் எப்போது செல்லலாம் என்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் சொல்லிவிட்டாராம். இதனால் நெல்சன் சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Shalu Shamu : கோவா கடற்கரையில்... பீர் பாட்டிலுடன் ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு - வைரலாகும் கிளாமர் கிளிக்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.