- Home
- Cinema
- Shalu Shamu : கோவா கடற்கரையில்... பீர் பாட்டிலுடன் ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு - வைரலாகும் கிளாமர் கிளிக்
Shalu Shamu : கோவா கடற்கரையில்... பீர் பாட்டிலுடன் ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு - வைரலாகும் கிளாமர் கிளிக்
Shalu Shamu : கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஷாலு ஷம்மு, அங்கு எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு, முதல் படத்திலேயே நடிகரி சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதன்பின் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து, இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என ஆசைப்பட்ட ஷாலு ஷம்முவிற்கு, இதுவரை ஹீரோயின் சான்ஸ் எதுவும் கிடைக்காததால், கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பவுடர் மற்றும் விஜய் சேதுபதியின் 46-வது படம் ஆகியவை உள்ளன. இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதில் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரை பீர் பாட்டிலுடன் கிக் ஏற்றும் விதமாக சைடு போஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Andrea Pisasu 2 : பிசாசு 2-வில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன்... கட்டாயப்படுத்துனாங்க - பகீர் கிளப்பிய ஆண்ட்ரியா