- Home
- Cinema
- Andrea Pisasu 2 : பிசாசு 2-வில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன்... கட்டாயப்படுத்துனாங்க - பகீர் கிளப்பிய ஆண்ட்ரியா
Andrea Pisasu 2 : பிசாசு 2-வில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன்... கட்டாயப்படுத்துனாங்க - பகீர் கிளப்பிய ஆண்ட்ரியா
Andrea Jeremiah Pisasu 2 : மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை, இயக்குனர் ராம் இயக்கத்தில் தரமணி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா ஜெர்மியா.
நடிப்பை போல் சினிமாவில் பாடகியாகவும் ஜொலித்து வரும் இவர், கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்காக பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற பாடல் பட்டிதொட்டி எங்கும் வரவேற்பை பெற்று செம்ம வைரல் ஆனது.
தற்போது நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 என்கிற திகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பேயாக நடித்துள்ளார். பிசாசு 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இதுதவிர க், நோ எண்ட்ரி போன்ற படங்களையும்கைவசம் வைத்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.
பிசாசு 2 படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 29-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பிசாசு 2 படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டேன். அந்த சமயத்தில் தான் பிசாசு 2 படவாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க மறுத்தேன், ஏனென்றால் 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க சொன்னார் இயக்குனர். நான் நோ சொல்லியபோதும் என்னை கட்டாயப்படுத்தினார்கள். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்” எனக் கூறி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே வடசென்னை படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... யோவ் எலான் மஸ்க்... அப்படியே நரகாசூரன் படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுயா - இயக்குனர் கார்த்திக் நரேன் நக்கல்