Jailer Box Office: இலங்கையில் முதல் நாளே வசூலில் மாஸ் காட்டிய 'ஜெயிலர்'..! எத்தனை கோடி தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இலங்கையில் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி உள்ளதால், இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள். சமீப காலமாகவே தலைவரின் படங்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத நிலையில், இப்படம் அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்கும் தீனி போடும் வகையில் அமைந்து, தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதேபோல் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் தாறுமாறாக ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக தமன்னா டான்ஸ் ஆடிய காவாலா லிரிக்கல் பாடல் வீடியோ வெளியானதில் இருந்தே, பல பிரபலங்களும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவேளைக்கு பின்னர், ரம்யா கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரஜினிக்கு மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்ணாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார், விநாயகன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தை, இன்று காலை முதலே ஒரு திருவிழாவை போல்... ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு ரஜினி ரசிகர்கள் வரவேற்று வரும் நிலையில், ஜெயிலர் திரைப்படம் இலங்கையில் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இப்படம் இலங்கையில் மட்டும் சுமார் 2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?