MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை... ஒரே நாளில் பீட் செய்த 'ஜெயிலர்'! இது தான் சூப்பர் ஸ்டார் பவர்!

Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை... ஒரே நாளில் பீட் செய்த 'ஜெயிலர்'! இது தான் சூப்பர் ஸ்டார் பவர்!

இன்று வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், அமெரிக்காவில் 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் பீட் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 11 2023, 08:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வசூல் ரீதியாக முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா கட்டிய போதிலும், விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர், கண்டிப்பாக அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு படத்தில் தான் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தீர்க்கமான முடிவில் இருந்ததால், பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு நிராகரித்து வந்துள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஒரு கட்டத்தில் கதை கேட்பதை கூட நிறுத்தி விட்டதாக 'ஜெயிலர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவரே கூறி இருந்தார். பின்னர் நெல்சன் திலீப் குமார், ரஜினிகாந்த்தை  சந்தித்து, இப்படத்தின் ஒன் லைன் மட்டுமே கூற, கதை அருமையாக இருக்கிறது. முழு கதையும் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்க்கு நெல்சன் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்து கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் சொன்னபடி 10 நாட்களில் மீண்டும் ரஜினியை சந்தித்து முழு கதையும் கூற ரஜினிகாந்துக்கு இந்த கதை திருப்திகரமாக இருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே 'ஜெயிலர்' படத்தின் அறிவிப்பு அதிகார பூர்வமாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சக்க போடு போட்ட சிவகார்த்திகேயனின் மாவீரன்! ஒட்டு மொத்த வசூலை ஓப்பனாக கூறிய தயாரிப்பு நிறுவனம்!
 

35

இப்படத்தில் நடிக்க ரஜினி ஓகே சொன்ன பிறகு, வெளியான பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்ததால்... சிலர் ரஜினியிடம் இப்படத்தில் இருந்து விலகுமாறு கூறியும், ரஜினிகாந்த் விடாப்பிடியாக நெல்சன் மீது நம்பிக்கை வைத்து நடித்து முடித்தார். அந்த நம்பிக்கை தான்... இன்று வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியாகவும் மாறியுள்ளது.
 

45

இன்று உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் ஜெயிலர் திரைப்படம் அமெரிக்காவில், வாரிசு படத்தின் ஒட்டு மொத்த வசூலை, 'ஜெயிலர்' திரைப்படம் ஒரே நாளில் பீட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
 

55

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், வாரிசு படம் அமெரிக்காவில் மொத்தமாக $1,141,590 வசூலித்திருந்த நிலையில், இன்று வெளியான ஜெயிலர் திரைப்படம்  முதல் நாளில் மட்டும் $1,158,000 வசூலித்து இருக்கிறதாம். இந்த தகவலை ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு... இது தான் சூப்பர் ஸ்டார் பவர் என்று வைரலாக்கி வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved