Jailer Box Office: இரண்டாவது நாளில் மளமளவென சரிந்த 'ஜெயிலர்' வசூல்..! இருந்தும் அடித்து நொறுக்கிய சாதனை..!
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது நாள் இந்திய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடாத நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆக்சன் டார்க் காமெடி திரைப்படத்தை, ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக இயக்கி உள்ளார் நெல்சன் திலீப் குமார். அதேபோல் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி செரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
அதிர்ச்சி நடிகர் வாசு விக்ரமின் தாயார் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் உலகளவில் 95.78 கோடி வசூல் சாதனை செய்தது.
இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 48.35 கோடி வசூல் செய்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்தியா முழுவதும் 'ஜெயிலர்' திரைப்படம் இரண்டாவது நாள் செய்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளை விட இரண்டாவது நாளின் வசூல் பாதியாக குறைந்துள்ளது. அணைத்து மொழிகளிலும் 27 கோடி மட்டுமே இரண்டாவது நாளில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹீரோயின் போல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மகள் தியா! குட்டையான கியூட் உடையில் கலக்கும் போட்டோஸ் வைரல்!
Jailer
உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் இரண்டே நாளில் 150 கோடியை கடந்திருக்கும் என கூறப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் 75.35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதும் அடித்து நொறுக்கும் சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளில் வசூல் குறைந்தாலும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்க கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.