ஹீரோயின் போல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மகள் தியா! குட்டையான கியூட் உடையில் கலக்கும் போட்டோஸ் வைரல்!
சூர்யா தற்போது மும்பையில் குடும்பத்துடன் குடியேறிவிட்ட நிலையில், அவ்வப்போது மீடியாக்களின் கண்களில் பட, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தியாவின் கியூட் போட்டோஸ் சில ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலிவுட் திரையுலகில், ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடியாக இருந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவருமே கடந்த ஆண்டு வரை, சென்னையில் இருந்த நிலையில்... பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.
இவர்களின் பிள்ளைகளான, தியா மற்றும் தேவ் இருவருமே, திருபாய் அம்பானி பள்ளியில் தான் தற்போது தங்களுடைய படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். சூர்யா - ஜோதிகா இருவருமே, தங்களுடைய குழந்தைகள் மீடியா கண்களின் பட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மும்பை சென்றதில் இருந்து அடிக்கடி வெளியாகி வைரலாகி விடுகிறது.
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அந்த வகையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் பிள்ளைகளோடு பாந்த்ராவில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வந்து செல்லும் போது, மீடியாக்கள் இவர்களை சூழ்ந்து கொள்ள சூர்யா முன்னே வந்து போஸ் கொடுத்தார். அப்போது அவரின் மகள் தியா பின்னால் நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிளைன் பிளாக் ஷார்ட் உடையில்... மிகவும் கியூட்டாக ஹீரோயின்களை மிஞ்சிய அழகில் இருக்கிறார் தியா. பின்னர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களின் பிள்ளைகள் என நான்குபேரும் ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்கள். இந்த போட்டோஸும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!