ரஜினியின் ஜெயிலர் பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்..! 15 நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது ஏன்?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு திடீரென 15 நாட்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
இதுதவிர யோகிபாபு, வஸந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... எல்லைமீறும் ராபர்ட்.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாரா ரச்சிதாவின் கணவர் தினேஷ்?
இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஜெயில் செட் அமைத்து அதில் ஷூட்டிங்கை நடத்தி வந்த படக்குழு, சில காட்சிகளை வெளிப்புறத்திலும் எடுக்க திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கடந்த 15 நாட்களாக நடத்தப்படவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் சென்னையில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை தானாம். அதுமட்டுமின்றி தற்போது மிகவும் குளிரான சூழல் நிலவி வருகிறது. இதில் ரஜினியை நடிக்க வைக்க முடியாது என்பதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஷூட்டிங்கை 15 நடத்தாமல் இருந்து வந்தார்களாம். இன்று முதல் மீண்டும் அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... வைரலான சர்ச்சை பதிவுகள்... பேஸ்புக்கில் இருந்து விலகிய லவ் டுடே இயக்குனர் - தப்பு பண்ணிவிட்டதாக உருக்கம்