வைரலான சர்ச்சை பதிவுகள்... பேஸ்புக்கில் இருந்து விலகிய லவ் டுடே இயக்குனர் - தப்பு பண்ணிவிட்டதாக உருக்கம்
லவ் டுடே இயக்குனர் போட்ட பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகத் தொடங்கியதால் சிலர் இயக்குனர் பிரதீப்பை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.
கோலிவுட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் லவ் டுடே படத்தின் வெற்றி தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியைக் கடந்து வெற்றிநடை போட்டு வருவதால் இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவும், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும் செம்ம சந்தோஷத்தில் உள்ளது.
லவ் டுடே படத்தை பார்த்த பலரும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வியந்து பாராட்டினர். அவரது நடிப்பு தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது ஒருபுறம் இருக்க அவரைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை சல்லடை போட்டு அலசிய நெட்டிசன்கள் அதில் அவர் போட்ட பழைய சமூக வலைதள பதிவுகளை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
அவர் யுவன் மற்றும் நடிகர் விஜய்யின் படங்களை விமர்சித்து பதிவிட்ட பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் பதிவுகள் தற்போது வைரலாகத் தொடங்கியதால் சிலர் இயக்குனர் பிரதீப்பை கடுமையாக ட்ரோல் செய்யத்தொடங்கினர். இந்நிலையில், இதுகுறித்து ஓப்பனாக பேசி உள்ளார் இயக்குனர் பிரதீப்.
இதையும் படியுங்கள்... ‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்
இதற்கு விளக்கமளித்து டுவிட்டரில் அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : “பரவி வரும் என்னுடைய பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் பல விஷயம் மாறும் என்பதால் என்னுடையை பேஸ்புக் பக்கத்தை Deactivate செய்து அதிலிருந்து விலகிவிட்டேன். விஷயங்களை மாற்ற முயற்சிக்கும் மக்கள் மீது எனக்கு கோபம் இல்லை அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மக்கள் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டியதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
வைரலாக பரவும் பதிவுகளில் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகளுடன் கூடிய பதிவுகள் போலியானது. நான் தவறு செய்துவிட்டேன். வயதுக்கு ஏற்றவாறு நாம் அனைவரும் வளர்கிறோம், கற்றுக்கொள்கிறோம். நான் சரிசெய்ய முயற்சி செய்தேன். சிறந்த மனிதனாக மாற நான் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகிறேன்” என உருக்கமாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப்.
இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம்