கமல் இடத்தை நிரப்ப போகும் விஜய் சேதுபதியை அன்றே கணித்த ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதியின் அசாதாரண திறமை குறித்து... சுமார் 5 வருடங்களுக்கு முன்பே கணித்து விட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி வாங்க இதுகுறித்த ஃபிளாஷ் பேக் தகவலை தெரிந்து கொள்வோம்.
Vijay Sethupathi
பல படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்து, பின்னர் குறும்படங்கள் மூலம் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி, 2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து 'சுந்தர பாண்டியன்' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, அந்த படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.
இதை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம்... இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து விஜய் சேதுபதி நடித்த படங்கள்... அவரை மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாற்றியது. குறிப்பாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்', 'சூது கவ்வும்', 'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்கள்... விஜய் சேதுபதிக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் கை கொடுத்து.
Vijay Sethupathi Cinema Carrier
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, கோலிவுட் திரையுலகை தாண்டி, டோலிவுட், மாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து ரசிகர்களை அசர வைத்து வருகிறார். ஹீரோ என்கிற இமேஜ் வந்து விட்டால்... மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க சில நடிகர்கள் தயக்கம் காட்டும் நிலையில், விஜய் சேதுபதி வில்லன், ஹீரோ, குணசித்ர வேடம் என எவ்வித பாகுபாடும் இன்றி நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 140 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
Vijay Sethupathi Upcoming Movies:
மேலும் இவரது கைவசம், விடுதலை 2, பிசாசு 2, ஏஸ், காந்தி டாக்ஸ், ட்ரைன் ஆகிய படங்கள் உள்ளன. நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி.. அக்டோபர் 6-ஆம் தேதி முதல், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கடந்த 7 சீசனாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8-வது சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கமல் இடத்தை விஜய் சேதுபதி தற்போது நிரப்ப உள்ள நிலையில்... இவரது அசாதாரண திறமையை ரஜினிகாந்த் கடந்த 5 வருடங்களுக்கு முன்பே 'பேட்ட' பட ஆடியோ லான்ச்சில் கணித்து கூறியுள்ளார்.
Petta Movie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம், 'பேட்ட'. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜித்து சிங்காரம் என்கிற, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த முக்கியமான கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என, ரஜினிகாந்த்.. கார்த்தி சுப்புராஜுடன் விவாதித்து வந்த போது, கார்த்தி சுப்புராஜ் விஜய் சேதுபதியின் பெயரை கூறி உள்ளார். இதற்க்கு ரஜினிகாந்தும் ஓகே சொன்ன நிலையில், படப்பிடிப்பில் இவரது திறமையான நடிப்பை பார்த்து விஜயர்ந்து பாராட்டினாராம்.
Rajinikanth About Vijay Sethupathi
இந்த தகவலை ரஜினிகாந்த் பேட்ட படத்தின் ஆடியோ லான்ச்சில் கூறி... விஜய் சேதுபதி அசாதாரண நடிகர். அவர் நடிப்பில் மட்டும் அல்ல பல துறையிலும் கலக்க கூடியவர் என கூறினார். இதன் மூலம் விஜய் சேதுபதியின் திறமையை 5 வருடங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் கணித்துவிட்டார் என ரசிகர்கள் இந்த ஃபிளாஷ் பேக் தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதே போல் தலைவரின் கணிப்பு தப்பாகாது , கமல்ஹாசன் இடத்தை நிரப்ப விஜய் சேதுபதி சரியான தேர்வாக இருப்பார் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.