MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ

கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ

ஐஸ்வர்யா இயக்க உள்ள கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Nov 05 2022, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதுவரை இப்படத்தின் 50 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள அடுத்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்கிற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் மற்றொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்... 2022-ல் அதிக பிளாக்பஸ்டர் ஹிட் யாருக்கு? முதலிடத்தில் கோலிவுட்... பரிதாப நிலையில் பாலிவுட் - முழு பட்டியல் இதோ

34

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அப்படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.

44

மேலும் இப்படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டதாம். அதனால் இப்படத்தில் கிரிக்கெட் நன்கு ஆடத்தெரிந்த நடிகர்களான விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். கூடுதல் சிறப்பாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்தை 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அடுத்த ‘ஆலுமா டோலுமா’ ரெடி... துணிவு படத்துக்காக அனிருத் பாடிய மாஸ் பாடலின் அப்டேட் வந்தாச்சு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Day 6 Box Office : 6ம் நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடித்த கருப்பு... வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved