ரஜினி 100 ரூபாய் அபராதம் கட்டினாரா.. உண்மையை உடைத்த எஸ்.பி..! செம்ம ட்விஸ்ட்?
ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றது தொடர்பாக இரண்டாவது சர்ச்சை எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்த லம்போர்கினி காரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஓட்டிச்செல்வது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. மாஸ்க் அணிந்த படி மாஸாக இருக்கும் தலைவரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திக்குமுக்காடினர்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு செல்ல ரஜினிகாந்த் E – Pass எடுத்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை உருவானது.
தற்போது ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்றே செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று வந்ததாக சென்னை மாநகராட்சி இ-ப்பாஸ் ஒன்றை வெளியிட்டது.
அந்த இ-பாஸில் நேற்று ஒருநாள் மட்டுமே ரஜினிகாந்த் செல்லும் படியாக தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் கார் ஒட்டிச்சென்ற புகைப்படமோ கடந்த 21ம் தேதி வைரலானது.
இந்த குழப்பத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாததற்காக போக்குவரத்து காவல்துறையிடம் ரூ.100 அபராதம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 26ம் தேதி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்ற போது, தாழம்பூர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனை வைத்து, ரஜினியை எதிர்த்து வருபவர்கள் சிலர்... சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என கூறும் இவரே இப்படி நடந்து கொள்ளலாமா? என்றும்... கோடியில் சம்பளம் இவருக்கு, 100 ரூபாய் செலுத்த, ஒரு மாதம் அவகாசமே? என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் உண்மை என்ன என்பதை கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 26ஆம் தேதி நடிகர் ரஜினியின் கார், பழைய மாமல்லபுரம் சாலையில் சென்றது உண்மை தான் என்றும் அந்த காரை தாழம்பூர் போலீசார் நிறுத்தி சோதித்ததும் உண்மை, ஆனால் கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அவருக்கு போலீசார் 100 அபதாரம் விதித்தனர்.
அந்த காரில் ரஜினி வரவில்லை. டிரைவர் மட்டுமே இருந்தார் என விளக்கமளித்துள்ளார். இந்த பதில் ரஜினியை கிண்டல் செய்து வந்தவர்களுக்கு செம்ம பதிலடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.