லிவிங் டூ கெதர் வாழ்க்கைக்கு குட்-பை... காதலனை கரம் பிடித்த ரஜினி பட நடிகை..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'தர்பார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷமதா அஞ்சான், தற்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
'தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். அவருடன் சக அதிகாரியாக நடித்திருந்தவர் நடிகை ஷமதா அஞ்சான்.
தர்பார் படத்தில், பல காட்சிகளில் அழகிய போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
சுமார் 40 நாட்கள் ரஜினியுடன் இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர், தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட... இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தன்னுடைய காதலர் காதலர் கவுரவ் வர்மா என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஷமதா அஞ்சான் காதலரை கரம் பிடித்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சியான தருணம் குறித்து, நடிகை ஷமதா அஞ்சான் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஷமதா அஞ்சான் தொலைக்காட்சி நடிகையாக இருந்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.