டூப் இல்லாமல் அதிக எடையை அசால்ட்டா தூக்கி கம்பீரமாக நின்ற ரஜினி: ஷாக்கான நெல்சன்!
Rajinikanth Lifted Heavy Weights Without Dupe in Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்காக டூப் இல்லாமல் அதிக எடையை தூக்கி நின்ற ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரஜினி ஜெயிலர் 2 படம்
ரஜினி என்ற ஒரு சொல் மந்திரத்தை உச்சரிக்காத சினிமா உலகமே இருக்க முடியாது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது கடின உழைப்பால் இன்று சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சினிமா உலகில் 50 ஆண்டுகளை கடந்து தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு இருப்பது உண்டு. அதுவும் ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் படம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் தான் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த, சுவாரஸ்ய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு
சென்னை, கோயம்புத்தூர், கேரளா, கோவா, மைசூரு ஆகிய பகுதிகளில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்காக அதிக எடையை ரஜினிகாந்த் எந்தவித டூப் இல்லாமல் தூக்கியுள்ளதாகவும், அதனை பார்த்த நெல்சன் அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி வருகிறது.
அதிக எடையை தூக்கிய ரஜினிகாந்த்
அதாவது, ரஜினிகாந்த் தொடர்பான சண்டைக் காட்சியை இயக்குநர் நெல்சன் படமாக்க இருந்தார். இதற்காக அதிக எடையை தூக்கி அதனை புரட்டி தலைகீழாக வைக்க வேண்டிய காட்சி எடுக்கப்பட இருந்தது. இதில் கடினமான காட்சிக்கு டூப் போட ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால், ரஜினிகாந்த் அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிய ரஜினிகாந்த் கடினமான காட்சிகளில் தானாகவே டூப் இல்லாமல் நடித்ததோடு அந்த அதிக எடையை அப்படியே தூக்கியுள்ளார். இந்த புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ஏஐ உருவாக்கிய படமா
ஆனால், அது ஏஐ உருவாக்கிய படமா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. எனினும், ரஜினிகாந்த் அதிக எடையை தூக்கியவாறு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.