கேஜிஎப் 2 சாதனை முறியடிப்பு... ராக்கி பாய் கோட்டையில் அலப்பறை கிளப்பும் ரஜினியின் ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள ஜெயிலர் திரைப்படம் கே.ஜி.எப் 2 படத்தின் சாதனையை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, விநாயகன், தமன்னா, வஸந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் முதல் நாளுக்கான 95 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. அதேபோல் வெளிநாட்டிலும் இப்படம் முன்பதிவில் மாஸ் காட்டி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் தற்போது வரை முன்பதிவின் மூலம் மட்டும் 7 லட்சம் டாலர்களுக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது ஜெயிலர்.
இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி... தலைவரையே ஓவர்டேக் செய்த ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படாததால், காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் பெங்களூருவில் அதிகாலை காட்சிகள் பார்க்க படையெடுக்க உள்ளனர். அதேபோன்று ஆந்திராவிலும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட உள்ளதால் அங்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் ஜெயிலர் திரைப்படம் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. அதன்படி யாஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் பெங்களூருவில் 1037 காட்சிகள் திரையிடப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜெயிலர் படம் அதை முறியடித்துள்ளது. இப்படத்திற்கு அங்கு 1090 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம். கர்நாடக சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது தான் அங்கு அப்படத்திற்கு இந்த அளவு மவுசு ஏற்பட காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான ஸ்டில்ஸ்