ஜெயிலர் பட நடிகர் ஜாபரின் காதலி இவரா?... சூப்பர்ஸ்டாரே பார்த்து சூப்பர்னு சொன்ன ஜோடியின் புகைப்படம் இதோ
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜாபரின் காதலி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தவர் ஜாபர். இவர் முதன்முதலில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி தொடரின் மூலம் தான். அதில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் ஜாபர். அந்த ஆந்தாலஜி தொடரில் ஜாபரின் நடிப்பை பார்த்து வியந்து போன கோலிவுட் இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வழங்கினர்.
இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திலும் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்து நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக மிரட்டிய ஜாபர், அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... சந்திரயானை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்... ரவுண்டு கட்டி வெளுத்துவாங்கிய நெட்டிசன்கள்!
நடிகர் ஷிவ ராஜ்குமாரின் ரெளடி கும்பலில் முக்கிய புள்ளியாக நடித்திருந்த ஜாபரின் கதாபாத்திரம் ரஜினியுடனே பெரும்பாலான காட்சிகளில் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ஜாபரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதையடுத்து ஷாருக்கான் உடன் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜாபர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், தன்னுடைய காதலி பற்றி ரஜினிகாந்த் விசாரித்தது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய ஜாபர், “எப்போ கல்யாணம் பண்ணுவனு ரஜினி சார் என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருநாள் என்னுடைய காதலியின் போட்டோவை காட்டினேன். உங்க கேர்ள் நல்லா இருக்காங்கனு சொல்லி வாழ்த்தினார். இதையடுத்து ஒருநாள் என்னுடைய காதலியுடன் ரஜினி சாரை பார்க்க சென்றேன். அப்போது என் காதலி ரொம்ப குஷியாகிவிட்டார் என கூறினார். நடிகர் ஜாபர் தனது காதலி உடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... துபாயில் வெயில் கொஞ்சம் அதிகம்.. குட்டியாக டிரஸ் போட்டு காற்றோட்டமாக வளம் வரும் ஐஸ்வர்யா மேனன்!