ஒரே ஒரு பாட்டு; தேவாவை 80 முறை வாழ்த்தி தங்க செயின் பரிசளித்த ரஜினி - எந்த பாட்டிற்காக தெரியுமா?
Deva and Rajini : பிரபல இசையமைப்பாளர் தேவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசளித்தது குறித்து மனந்திருந்து பேசி இருக்கிறார்.
Rajinikanth
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 1980களின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் எங்கும் நிறைந்திருந்தது. இந்த சூழலில் தான் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் தான் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இருப்பினும் இந்த இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி, அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு, தன்னுடைய படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக மாறினார் தேவா.
கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மனசுக்கேத்த மகராசா". அதுவரை ராமராஜன் திரைப்படங்களுக்கு இளையராஜா மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் அந்த திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அரிமமானார் தேவா. ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே "மாட்டுக்கார மன்னாரு" என்ற திரைப்படத்தில் அவர் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து; முதல் முறையாக வாய் திறந்த விஜய் ஏசுதாஸ்!
AR Rahman
தமிழில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த தேவாவிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படம் தான் முதல் முதலில் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வெற்றிகொடுத்த திரைப்படமாக மாறியது. 1991ம் ஆண்டில் மட்டும் தேவா இசையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வெளியான நிலையில், 1992 ஆம் ஆண்டு, அதாவது அவர் திரையுலகில் அறிமுகமான மூன்று ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மிகப்பெரிய இசை மேதியாக மாறினார்.
Deva with SPB
அதேபோல கானா பாடல்கள் மட்டுமே தேவாவிற்கு மிகப்பெரிய ஹிட் ஆகி வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்றுக்கு அவர் அமைத்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக அப்பட பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த திரைப்படம் தான் கடந்த 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "அண்ணாமலை" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றளவும் பிளாக்பஸ்டர் வெற்றியாக திகழ்ந்து வரும் பாட்ஷா திரைப்படத்திற்கும் இசையமைத்தது தேவார தான்.
annamalai
இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு அண்ணாமலை படத்திற்கு இசையமைத்தது குறித்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பகிர்ந்து கொண்ட தேவா, அண்ணாமலை திரைப்படம் என்னுடைய திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாறியது. அதிலும் குறிப்பாக "ஒரு பெண் புறா" என்ற பாடல் இப்போது வரை பலருடைய விருப்பமான பாடலாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த பாடலை கேசட் மூலம் பதிவு செய்து திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரஜினியிடம் நாங்கள் கொடுத்தோம். அதைக் கேட்டுவிட்டு, சுமார் 80 முறை எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை வாழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் ராகவேந்திரா டாலர் பதித்த ஒரு தங்க சங்கிலியையும் எனக்கு பரிசளித்து மகிழ்ந்தார் ரஜினிகாந்த் என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார் தேவா.
TRP-யில் புஸ்சுனு போன விஜய் டிவி; அடிச்சுதூக்கிய சன் டிவி! இந்த வார டாப் 10 சீரியல்கள் இதோ