ரஜினிகாந்த் வீடு முன் ரசிகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!
First Published Jan 1, 2021, 10:36 AM IST
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர் ஒருவர் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனால் மனமுடைந்த ரசிகர்கள் ஒருவர் ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இம்முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்த போதிலும், சிலர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது முடிவை ஏற்று கொள்வதாக கூறினர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?