- Home
- Cinema
- மோனிகா பெலூச்சி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ரஜினியின் கூலி படத்தின் மோனிகா லிரிக் வீடீயோ வெளியீடு
மோனிகா பெலூச்சி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ரஜினியின் கூலி படத்தின் மோனிகா லிரிக் வீடீயோ வெளியீடு
monica lyric video released : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தின் மோனிகா லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை துள்ளலான ஆட்டம் போட வைக்கிறது.

ரஜினிகாந்த் கூலி படம் ரிலீஸ் தேதி
Coolie monica lyric video released : இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தான் கூ.லி. கார்த்தி, விஜய், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இன்றைய ரசிகர்களுக்கு ஒரு படம், எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ரஜினியை ஆட்டம் போட வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.
கூலி ரிலீஸ் தேதி
வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மோனிகா லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும், நாகர்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாகிர், ரெபே மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், காளி வெங்கட், மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி
கிட்டத்தட்ட ரூ.350 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதே போன்று, இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு ரூ.50 கோடி, நாகர்ஜூனா ரூ.24 கோடி, சிறப்பு தோற்றத்தில் வரும் அமீர் கான் ரூ.30 கோடி, பூஜா ஹெக்டே ரூ.2 கோடி என்று பிரபலங்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் கூலி படம் மோனிகா லிரிக்கல் வீடியோ வெளியீடு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற கூலி டிஸ்கோ, பவர்ஹவுஸ் வைப் மற்றும் சிக்கிட்டு ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியான நிலையில் இப்போது மோனிகா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு கூலி படத்தில் குத்தாட்டம் போடப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில் இப்போது அவரது பாடல் அடங்கிய லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
மோனிகா லிரிக் வீடியோ வெளியீடு
விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். சுப்லாஷினி, அனிருத், அசல் கோலாறு ஆகியோர் பலர் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்தப் பாடலானது முழுவதுமாக ஹார்பர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி என்று அந்த பாடல் லிரிக்கல் வீடியொ தொடங்குகிறது.
ரஜினிகாந்த் ஜெயிலர் தமன்னா குத்தாட்டம்
இந்தப் பாடல் படத்தில் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் வரக் கூடிய படங்களில் முக்கியமான படமாக கூலி படம் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அதே போன்று இந்தப் படத்திலும் இப்போது பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதன் மூலமாக ரஜினியுடன் நடிக்கும் அவர்களது கனவு நிறைவேறிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.