சத்யநாராயணாவுக்கு ஹார்ட் அட்டாக்.. பெங்களூரு சென்றடைந்த ரஜினி.. அதிர்ச்சி
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரைப்பார்க்க ரஜினி பெங்களூரு விரைந்துள்ளார்.

Rajinikanth Brother Hospitalised
பெங்களூரிவில் இருக்கும் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள சத்யநாராயணாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் சகோதரருக்கு மாரடைப்பு
சத்யநாராயணாவுக்கு தற்போது 84 வயது ஆகிறது. தனது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை கேள்விப்பட்டதும் நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு விரைந்திருக்கிறார். ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த சூப்பர்ஸ்டார் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய சகோதரரை நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்று பார்ப்பது போல் ஒரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய அண்ணன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் தனக்கு அண்ணா இல்லை ஒரு தந்தை என பல மேடைகளில் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.