- Home
- Cinema
- Breaking: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த் - யோகி பாபு!
Breaking: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த் - யோகி பாபு!
முதலமைச்சர் குறித்த புகைப்பட கண்காட்சியை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.

முதல்வர் மு க ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் துவங்கப்பட்டுள்ள, புகைப்பட கண்காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய அவருடைய மகனும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் சமீபத்தில் தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவருடைய பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முதல்வரின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக அவர் அரசியலில் கால் பதித்தது முதல், தற்போது வரை மக்களின் போராட்டங்களில் கலந்து கொண்டது, சிறைச்சாலை சென்றது, போன்றவற்றை புகைப்படங்கள் ஆகவும் சிலைகளாகவும் வடித்து சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக நடந்து வரின் இந்த கண்காட்சியை உலக நாயகன் கமலஹாசன் திறந்து வைத்தார்.
மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து வரும் நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்தும் - யோகி பாபுவும் ஒரே நேரத்தில் பார்வையிட்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.