உன் வாழ்க்கை உன் கையில்..! ரஜினிகாந்த் - கமல் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் ஆகியோர் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இரவு 12 மணி முதலே மக்கள் ஆங்கில புத்தாண்டை பட்டாசு வெடித்து, ஆட்டம் - பாட்டத்தோடு வரவேற்ற நிலையில், காலை முதல் கோவில்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜாதி மத, பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... பிரபலங்கள், அரசியல்வாதிகள், என அனைவருமே தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரவு 12 மணிக்கே "உன் வாழ்க்கை உன் கையில் என்கிற ஹேஷ்டேக்குடன்... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் புத்தாண்டு அன்று தன்னை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தார். இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கும் கமலஹாசன், சற்று முன்னர் twitter மூலம் கூறியுள்ள தன்னுடைய புத்தாண்டு வாழ்த்து குறிப்பில் கூறியுள்ளதாவது... "ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து. #NewYear2023 என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.