- Home
- Cinema
- Vijayendra Prasad : RRR இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கா? - உண்மையை போட்டுடைத்த ராஜமவுலியின் தந்தை
Vijayendra Prasad : RRR இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கா? - உண்மையை போட்டுடைத்த ராஜமவுலியின் தந்தை
Vijayendra Prasad : ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது குறித்து இப்படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதியே ரிலீசாக இருந்தது. அந்த சமயத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியதன் காரணமாக அப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக மார்ச் 25-ந் தேதி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இப்படம் கொமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் கொமரம் பீம் ஆக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராம ராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
RRR Movie
வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது வரை பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாகவே ஓடி வருகிறது. இப்படம் 8 நாட்களில் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது குறித்து இப்படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி, ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவர் கூறி உள்ளார். இது தொடர்பான ஐடியாவை ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆரிடம் சொன்னதாகவும், அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்ததாகவும் விஜயேந்திர பிரசாத் கூறினார். மேலும் அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் மகேஷ் பாபு படத்தை ராஜமவுலி இயக்கி முடித்த பின்னரே ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் குறித்து முடிவெடுக்கப்படும் என விஜயேந்திர பிரசாத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... BB Ultimate : ரூ.25 லட்சத்துடன் டீல் பேசும் சிம்பு... பெட்டியை தட்டித் தூக்கப்போவது யார்? - பரபரக்கும் புரோமோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.