பிரசவத்திற்கு சென்ற ஆலியா..ஆளை மாற்றிய பிரபல சீரியல் ?..
இரண்டாவது முறை கர்ப்பம் தரித்துள்ள ஆலியா சீரியலில் இருந்து விலகுவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Alyamanasa
ராஜா ராணி ஆலியா :
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய சீரியல் ராஜா ராணி. இதில் சஞ்சீவ் - ஆலியா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் மூலம் ஆலியா ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார்.
Alyamanasa
படிக்காத ஏழை மருமகள் :
பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இந்த தொடரில் படிக்காத ஏழை பெண்ணாக நடித்திருந்தார். வீட்டில் வேலைசெய்யு, செய்யும் பெண்ணை வீட்டின் இளய மகன் காதல் திருமணம் செய்து கொள்கிறான். இதனால் கடுப்பாகும் அந்த அந்த குடும்பம் கொடுக்கும் இன்னல்கள் மற்றும் அதிலிருந்து நாயகி எப்படி தப்பித்து தன்னை நிரூபித்தால் என்பதை இந்த தொடர் காட்டி இருந்தது.
Alyamanasa
தனது வெகுளி தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருந்தார் ஆலியா. அதோடு அந்த சீரியலின் நாயகனையும் கவர்ந்திழுத்தார்.
Alyamanasa
சஞ்சீவ் -ஆலியா திருமணம் :
ராஜா ராணி தொடரில் நடித்த போது நாயகன் சஞ்சீவ் - ஆலியா மானசா இடையே காதல் மலர்ந்து.இந்த தொடரில் நடிக்கையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
Alyamanasa
பெண் குழந்தைக்கு தாயான ஆலியா :
கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா மீண்டும் சீரியலில் துவங்கினார்.
raja rani 2
ராஜா ராணி 2 :
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
Raja Rani
போலீஸாக எண்ணும் நாயகி :
ராஜா ராணி 2-வில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கும் நாயகி ஸ்விட் கடை காரருக்கு மனைவி ஆகிறார்... இருந்தும் தனது ஆசைகளை வெளியில் சொல்லாமல் சந்தியா அந்த குடும்பத்திற்கு ஏற்றார் போல மாற முயற்சிக்கு கதைக்களம் கொண்டது..
Raja Rani
அடுத்த சந்தியா யார் :
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மான்ஸாவுக்கு பிரசவ தேதி நெருங்கி விட்டது. இந்நிலையில் இவருக்கு பதில் சந்தியாவாக யார் நடிக்கவுள்ளனர் என்கிற கேள்வி எழுந்த நிலையில்.இதற்கு பதிலளித்த ஆலியா..ஒரே ஒரு சந்தியா அது நான் தான் என கூறியுள்ளார்.