ஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்க காசு! நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்!

ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கூறியபோது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய கூடாது என, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கொதித்தெழுந்தனர். மெரினா கடற்கரையே மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போனது. பாரம்பரியத்தை காக்க தமிழ் மக்களின் எழுச்சியை கண்டு உலக மக்களே வாயடைத்து போனார்கள்.

இந்த போராட்டத்தில் தன்னுடைய மாபெரும் பங்கை வகித்த நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ட்விட்டர் மூலம் நெகிழவைக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, ஜல்லி கட்டு போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் பெயர் பொறித்த தங்க காசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது, தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.

போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என அறிவித்துள்ளார்.

குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என தன்னுடைய அறிக்கையில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.