நயன்தாராவின் கியூட்டான குழந்தைகளை பார்க்க லேடி சூப்பர்ஸ்டாரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல நடிகை
நடிகை நயன்தாராவையும் அவரது குழந்தைகளையும் பார்க்க பிரபல நடிகை ஒருவர், லேடி சூப்பர்ஸ்டாரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் தனது காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது இந்த ஜோடி.
அது எப்படி நான்கே மாதத்தில் குழந்தை பெற்றிருக்க முடியும் என நெட்டிசன்கள் ஆராய்ந்த போது தான், இவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது தெரியவந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அதுதொடர்பான விசாரணையில் அவர்கள் விதிகளை மீறவில்லை என்பது தெரிந்த பின்னர் தான் சர்ச்சைகள் ஓய்ந்தன.
இதையும் படியுங்கள்... நயன் - விக்கி ஜோடி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்து நடிகை சமந்தா சொன்ன ‘நச்’ கருத்து
தற்போது படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் முழு நேரமும் குழந்தைகள் உடனே இருந்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் நடிகை நயன்தாராவையும் அவரது குழந்தைகளையும் பார்க்க லேடி சூப்பர்ஸ்டாரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகை ராதிகா. அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அழகான குழந்தைகளையும், அன்பான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பார்த்ததில் மகிழ்ச்சி என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற நானும் ரவுடி தான் படத்தில் நடிகை ராதிகா போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் விஜய் சேதுபதியின் அம்மாவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கடல்கன்னி உடையில் கவர்ச்சி கன்னியாக ஜொலிக்கும் ஜான்வி கபூர்... வைரலாகும் கிளாமர் போட்டோஸ் இதோ