நயன் - விக்கி ஜோடி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்து நடிகை சமந்தா சொன்ன ‘நச்’ கருத்து
யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா தற்போது அரியவகை நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்து இருக்கிறார். ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கி இருக்கின்றனர்.
யசோதா படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நடிகை சமந்தா, தற்போது புரமோஷன் பணிகளிலும் பிசியாக இயங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாடகைத் தாய் முறை குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படியுங்கள்... சித்தார்த் உடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா... அவருடன் படுக்கையை பகிரவும் தயார் - நடிகையின் பளீச் பேச்சால் பரபரப்பு
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் வாடகைத் தாய் முறை தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால், இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ள சமயத்தில் சமந்தா நடிப்பில் இப்படி ஒரு படம் வருவது பலருக்கும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அதுகுறித்து நடிகை சமந்தா கூறியதாவது : “வாடகைத் தாய் என்பது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக இருப்பதனால் யசோதா படம் பண்ணவில்லை. சில வருடங்கள் முன்னரே நான் இப்படத்தில் நடித்து முடித்துவிட்டேன். மேலும் அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தந்தால், அதில் தவறில்லை. அதுமட்டுமின்றி இதன்மூலம் படத்துக்கும் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது” என நடிகை சமந்தா அந்த பேட்டியில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 1000 கோடி பட்ஜெட் படம்..சூர்யா, யாஷுக்கு நோ சொல்லிவிட்டு ‘வேள்பாரி’யாக நடிக்க இந்தி நடிகரை களமிறக்கும் ஷங்கர்?