- Home
- Cinema
- ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த புஷ்பா 2: வெளியீட்டுக்கு முன்பே ரூ.900 கோடி வசூல் குவித்து சாதனை!
ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்த புஷ்பா 2: வெளியீட்டுக்கு முன்பே ரூ.900 கோடி வசூல் குவித்து சாதனை!
Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release: புஷ்பா 2 படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.900 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி மற்றும் ஸ்டேட்லைட் உரிமைகள் மூலம் இந்த வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது. படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Allu Arjun, Rashmika Mandanna, Pushpa 2: The Rule
Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release: அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் வெளியீட்டிற்கு முன்பே இந்த படம் ரூ.900 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகுபலி தி பிகினிங் மற்றும் பாகுபலி 2 தி கன்க்ளூசன், கல்கி 2989 ஏடி, காந்தாரா, தேவாரா: பார்ட் 1 போன்ற பெரிய பட்ஜெட் படங்களை இந்திய சினிமா வரவேற்றுள்ளது.
Allu Arjun, Rashmika Mandanna, Pushpa 2
இந்தப் படங்களின் வரிசையில் தற்போது புஷ்பா 2 படமும் இணைய உள்ளது. இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் புஷ்பா 2 – தி ரூல். இந்தப் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரையங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Pushpa 2 Collects Rs 900 Crore In Pre-Release
இந்த நிலையில் தான் புஷ்பா 2 படம் வெளியீட்டிற்கு முன்பாகவே ரூ.900 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, 2 ஓடிடி ரைட்ஸ் மற்றும் ஸ்டேட்லைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலமாக ரூ.900 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இது தவிர இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் வசூல் குவித்து தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
Pushpa 2: The Rule, Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release
ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ.650 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. புஷ்பா 2 இன் டிஜிட்டல் உரிமையை Netflix வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் OTT உரிமையை ரூ 270 கோடிக்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Pushpa 2: The Rule, Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release
புஷ்பா 2: தி ரூல் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. புஷ்பா 2 படமானது ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார்.
Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release
இந்த படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து பகத் பாசில், பிரியாமணி, அனசுயா பரத்வாஜ், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Pushpa 2 - The Rule, Pushpa 2 Collects Rs 900 Crore in Pre-Release
புஷ்பா 2 படத்திற்கு முன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வந்த ஆர்ஆர்ஆர் படம் வெளியீட்டிற்கு முன் ரூ.900 கோடி வசூல் குவித்திருந்தது. இது திரையரங்கு உரிமை, டிஜிட்டல் மற்றும் ஸ்டேட்லைட் ரைட்ஸ் என்று மொத்தமாக ரூ.900 கோடி வசூல் குவித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.