- Home
- Cinema
- புராஜெக்ட் கே படத்தில் இணைந்தார் கமல்ஹாசன்! ஆத்தாடி... பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?
புராஜெக்ட் கே படத்தில் இணைந்தார் கமல்ஹாசன்! ஆத்தாடி... பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Project K
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புராஜெக்ட் கே. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். அவர் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை இயக்கியவர் ஆவார். தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமான புராஜெக்ட் கே-வில் ஏற்கனவே பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Project K
புராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ள தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் வருகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு கமல் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ரஜினி, அஜித், முதல் விஜய் தேவரகொண்டா வரை புகைப்பழக்கத்தை கைவிட்ட பிரபலங்கள்! ஏன்? சுவாரஸ்யமான காரணங்கள்!
Nag Ashwin, Kamalhaasan
அதன்படி புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபஸுக்கு வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசன் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். அவரது கெரியரிலேயே அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுதான் என கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் கமல்ஹாசன் அப்பட ஷூட்டிங் முடிந்ததும் புராஜெக்ட் கே படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புராஜெக்ட் கே படத்தை வருகிற 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளனர்.
Prabhas, Kamalhaasan
புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் பிரபாஸ், என் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தருணம் இது. கமல்ஹாசன் போன்ற ஒரு லெஜண்ட் உடன் புராஜெக்ட் கே-வில் இணைந்து பணியாற்ற உள்ளதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்படிப்பட்ட சினிமாவின் டைட்டனுடன் சேர்ந்து கற்று வளரும் வாய்ப்பு கிடைத்துள்ளதை என் கனவு நனவான தருணமாக நான் கருதுகிறேன் என நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... cow தாத்தானு தான் கூப்பிடுவான்... வெளிநாட்டில் என் போஸ்டர் பார்த்து பேரன் செய்த செயல் - நெகிழ்ந்துபோன ராமராஜன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.