தளபதி விஜய்யின் தந்தையிடம் பண மோசடி..! தயாரிப்பாளருக்கு சிறை..!

First Published 3, Nov 2020, 6:59 PM

பிரபல இயக்குனரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், பணம் மோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு, இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் "அழகிய தமிழ் மகன்".

இந்த படத்தில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்திருந்தார். வில்லன் விஜய்க்கு ஜோடியாக நமீதா நடித்திருந்தார்.

இந்த படத்தை சுவர்க சித்ரா அப்பச்சன் என்பவர் தயாரித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன், விஜய்யின் தந்தையிடம் ரூபாய் ஒரு கோடி, பெற்று திரும்பி தராமல் மோசடி செய்ததாக விஜய்யின் தந்தை தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியான நிலையில் ’பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பரபரப்பு தீர்ப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.