படம் பண்ணலாமான்னு விஜய் கேட்டதும் பயம் தான் வந்தது! பிரச்சனையே இது தான்.. தயாரிப்பாளர் லலித் கூறிய உண்மை!
லியோ படத்தின் வெற்றி விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சமீப காலமாக தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
தளபதி நடிப்பில் வெளியாகி, 15 நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள 'லியோ' படத்தின் வெற்றி விழா தற்போது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 'லியோ' படத்தில் நடித்துள்ள ஒட்டு மொத்த, நடிகர் - நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தளபதியுடன் நடித்தது குறித்து, இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலீத் பேசுகிறார் பேசுகையில், கொரோனா காலம் என்பதால் 'மாஸ்டர்' படத்தை ஓடிடியில் கொடுக்கலாமா என தளபதியுடன் கேட்டதற்கு, நாம தியேட்டரை காப்பாற்றவில்லை என்றால் யார் காப்பாற்றுவார்? என கேட்டார் விஜய். என் ரசிகர்களை மகிழ்விக்க தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதை உறுதியாக இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் என எங்களுடன் நின்றார். மாஸ்டருக்கு பின் ஒருநாள் என்னை அழைத்து மீண்டும் படம் பண்ணலாமா என கேட்டார்? எனக்கு சந்தோஷத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. ஏன் என்றால் படம் எடுப்பது சுலபம். அதை வெளியிடுவது தான் சிரமம். பிரச்சனை எங்கிருந்து வரும். எந்த ரூபத்தில் வரும் என யூகிக்க முடியாது.
அதே போல் லியோ ஆடியோ லான்ச் நடத்தாது, ரசிகர்களை காட்டிலும் எனக்கு தான் வருத்தம் அதிகம். அப்போது இதே இடத்தில் விழா எடுக்க வேண்டும் என உறுதியேற்று, இன்று நடத்துகிறோம். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தியது மிகுந்த சவாலாக இருந்தது என தெரிவித்தார்.
விஜய்க்காக நான் வையிட்டிங்... தளபதியை வைத்து இயக்க சக்ஸஸ் மீட்டில் பிளான் போட்ட கெளதம் மேனன்!